திருக்குறள் 16: விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே — பசும்புல் தலைகாண்பு அரிது.
திருக்குறள் 16 — வான்சிறப்பு (The Blessing of Rain), அறத்துப்பால்.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
கலைஞர் உரை
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்
மு. வரதராசன் உரை
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது
சாலமன் பாப்பையா உரை
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: விசும்பின் துளி வீழின் அல்லால் - மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது - வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது. ('விசும்பு' ஆகு பெயர். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: வானின்று துளிவீழினல்லது அவ்விடத்துப் பசுத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது. ஆங்கென்பதனை அசையாக்கினு மமையும். இஃது ஓரறிவுயிருங் கெடுமென்றது.
வீ. முனிசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: மேகத்திலிருந்து மழைத்துளிகள் வீழாவிட்டால் பசும்புல்லினது தலையையும் காணுதல் அரிதாகிவிடும்.
Visumpin Thuliveezhin Allaalmar Raange
Pasumpul Thalaikaanpu Aridhu
Couplet
If from the clouds no drops of rain are shed'Tis rare to see green herb lift up its head
Translation
No grassy blade its head will rear, If from the cloud no drop appear
Explanation
If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளக்கு மாறு.
Illai Thavaravarkku Aayinum Ootudhal
Valladhu Avaralikku Maaru
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Manjari Deshpande
1 year ago
A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.