அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. | குறள் எண் - 247

arulillaarkku-avvulakam-illai-porulillaarkku-ivvulakam-illaaki-yaangu-247

122

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

"பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது"

கலைஞர் உரை

"பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்."

மு. வரதராசன் உரை

"பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு - பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல. ( 'அவ்வுலகம், இவ்வுலகம்' என்பன ஆகுபெயர். இவ்வுலகத்து இன்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல அவ்வுலகத்து இன்பங்கட்கு அருள் காரணம் என்பதாயிற்று.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: அருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சியில்லை; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங்காட்சி யில்லையானாற்போல. இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: பொருளில்லாதவர்களுக்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாதலைப் போல உயிர்கள் மீது அருளில்லாதவர்களுக்கு அவ்வுலகப் பேரின்பம் இல்லையாகும். "

வி முனுசாமி உரை

Arulillaarkku Avvulakam Illai Porulillaarkku
Ivvulakam Illaaki Yaangu

Couplet

As to impoverished men this present world is not;The 'graceless' in you world have neither part nor lot

Translation

This world is not for weathless ones That world is not for graceless swines

Explanation

As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness

122

Write Your Comment