பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர் க்கு. | குறள் எண் - 347

patri-vitaaa-itumpaikal-patrinaip-patri-vitaaa-thavarkku-347

53

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர் க்கு.

"பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன"

கலைஞர் உரை

"யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன."

மு. வரதராசன் உரை

"ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு - இருவகைப் பற்றினையும் இறுகப்பற்றி விடாதாரை, இடும்பைகள் பற்றி விடாஅ - பிறவித் துன்பங்கள் இறுகப்பற்றி விடா. (இறுகப் பற்றுதல் - காதல் கூர்தல், விடாதவர்க்கு என்பது வேற்றுமை மயக்கம். இதனான், இவை விடாதவர்க்கு வீடு இல்லை என்பது கூறப்பட்டது.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: பொருள்களைப் பற்றி விடாதவரைத் துன்பங்கள் விடாதே பற்றி நிற்கும். இது பொருள்களைத் துறவாக்கால் வினை கெடாதென்றது. "

மணி குடவர் உரை

Patri Vitaaa Itumpaikal Patrinaip
Patri Vitaaa Thavarkku

Couplet

Who cling to things that cling and eager clasp,Griefs cling to them with unrelaxing grasp

Translation

Grief clings on and on to those Who cling to bonds without release

Explanation

Sorrows will never let go their hold of those who give not up their hold of desire

53

Write Your Comment