தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ. | குறள் எண் - 1159

Thirukkural Tamil & English Definition
திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ.
கலைஞர் உரை
"ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!"
மு. வரதராசன் உரை
"நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ."
சாலமன் பாப்பையா உரை
"தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?"
பாரி மேலகர் உரை
"பரிமேலழகர் உரை: (காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடுமாகலான் நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) தீத்தொடின் சுடின் சுடலல்லது - தீத்தன்னைத் தொட்டாற் சுடுமாயின் சுடுதல்லது; காமநோய் போலவிடின் சுடல் ஆற்றுமோ - காமமாகிய நோய் போலத் தன்னை அகன்றால் தப்பாது சுடுதலை வற்றோ! மாட்டாது. (சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தப்பிக்கப்படாதாயின் என்றவாறு. காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள், வாளா 'சுடல்' என்றாள். அகறல்: நுகராமை. 'சுடல்' என்பது முன்னும் கூட்டப்பட்டது. 'தீயினும் கொடியதனை யான் ஆற்றுமாறு என்னை' என்பதாம்.) "
மணி குடவர் உரை
"மணக்குடவர் உரை: தீண்டினாற் சுடுமதல்லது காமநோய்போல, நீங்கினாற் சுடவற்றோ தீ. தலைமகன் பிரிந்துழித் தலைமகளாற்றாமை கண்டு தோழி கூறியது. "
வி முனுசாமி உரை
"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தீயானது தன்னைத் தொட்டவரைத்தான் சுடும், காமமாகிய நோய்போலத் தன்னைவிட்டு நீங்கினால் சுடுகின்ற தன்மை உடையதோ?. "
Thotirsutin Alladhu Kaamanoi Pola Vitirsutal Aatrumo Thee
Couplet
Fire burns the hands that touch; but smart of loveWill burn in hearts that far away remove
Translation
Can fire that burns by touch burn like Parting of the hearts love-sick?
Explanation
Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?
Write Your Comment