துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை. | குறள் எண் - 1157

thuraivan-thurandhamai-thootraakol-munkai-iraiiravaa-nindra-valai-1157

14

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.

"என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!"

கலைஞர் உரை

"என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ."

மு. வரதராசன் உரை

"அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?"

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) துறைவன் துறந்தமை - துறைவன் என்னைப் பிரியலுற்றமையை; முன் கை இறை இறவாநின்ற வளை தூற்றாகொல் - அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்து என் முன் கையில் இறையினின்றும் கழலாநின்ற வளைகள் எனக்கு அறிவியாவோ? அவன் உணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவித்தல் வேண்டுமோ? (முன்னே நிகழ்ந்தமையின் 'துறந்தமை' என்றும், கேட்ட துணையான் மெலிந்து ஆற்றாமையின், 'இறவாநின்ற' என்றும் கூறினாள். 'அழுங்குவித்து வந்து கூறற்பாலை யல்¬யாய நீயும், இவ்வளைகள் செய்தனவே செய்தாய்' எனப் புலந்து கூறியவாறு.) "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: இறைவன் பிரிகின்றமையை எமக்கு அறிவியாவோ? முன் கையின் இறையைக் கடவாநின்ற வளைகள். முன்பே அறிதலான், உடம்பு மெலிந்தது என்றவா றாயிற்று. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தலைவர் என்னைப் பிரிந்து செல்லுகின்றார் என்பதனை அவர் உணர்த்தாமலேயே தாமே உணர்ந்து என் முன் கையினின்றும் சுழலுகின்ற வளையல்கள் அறிவியாவோ?. "

வி முனுசாமி உரை

Thuraivan Thurandhamai Thootraakol Munkai
Iraiiravaa Nindra Valai

Couplet

The bracelet slipping from my wrist announced beforeDeparture of the Prince that rules the ocean shore

Translation

Will not my gliding bangles' cry The parting of my lord betray?

Explanation

Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?

14

Write Your Comment

Related Thirukkural