கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் — பெண்நிறைந்த நீர்மை பெரிது. | குறள் எண் - 1272

Thirukkural Verse 1272

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்

பெண்நிறைந்த நீர்மை பெரிது.

கலைஞர் உரை

கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்

மு. வரதராசன் உரை

கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.

சாலமன் பாப்பையா உரை

என் கண் நிறைந்த அழகையும், மூங்கிலைப் போன்ற தோளையும் உடைய இப்பேதைக்குப் பெண்கள் எல்லாரிடமும் இருக்கும் குண மேன்மையிலும் அதிக மேன்மை இருக்கிறது.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: (நாணால் அவள் அது சொல்லாளாயவழி அவன் தோழிக்குச் சொல்லியது.) கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு - என் கண்ணிறைந்த அழகினையும் வேயையொத்த தோளினையும் உடைய நின் பேதைக்கு; பெண் நிறைந்த நீர்மை பெரிது - பெண்பாலரிடத்து நிறைந்த மடமை அவ்வளவன்றி மிகுந்தது. (இலதாய பிரிவினைத் தன்கண் ஏற்றி அதற்கு அஞ்சுதலான், இவ்வாறு கூறினான்.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: காண்பார் கண்ணிறைந்த அழகினையும் காம்பையொத்த தோளினையும் உடைய பேதைக்குப் பெண்மை நிறைந்த நீர்மை பெரிது.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: என்னுடைய கண்கள் நிறைந்த அழகினையும் மூங்கிலையொத்த தோளினையும் உடைய பேதைக்கு பெண்களுக்கு இயல்பாக இருக்கும் மடமைக்குணம் அளவு கடந்து இருக்கின்றது.

Kanniraindha Kaarikaik Kaamperdhot Pedhaikkup

Penniraindha Neermai Peridhu

Couplet

The simple one whose beauty fills mine eye, whose shoulders curveLike bambu stem, hath all a woman's modest sweet reserve

Translation

With seemly grace and stem-like arms The simple she has ample charms

Explanation

Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா ஆறு.

Yaamkannin Kaana Nakupa Arivillaar

Yaampatta Thaampataa Aaru

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.