நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் — எழுநாளேம் மேனி பசந்து. | குறள் எண் - 1278

Thirukkural Verse 1278

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்

எழுநாளேம் மேனி பசந்து.

கலைஞர் உரை

நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே

மு. வரதராசன் உரை

எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.

சாலமன் பாப்பையா உரை

என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) எம் காதலர் சென்றார் நெருநற்று - எம்காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே; யாமும் மேனி பசந்து எழுநாளேம் - அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து எழுநாள் உடையமாயினேம். ('நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டது' என்பாள், 'நெருநற்றுச் சென்றார்' என்றும், அதனை ஐயுற்றுச் செல்கின்றது ஏழுநாளுண்டாகலின்,அன்றே மேனி பசந்தது என்பாள். 'மேனி பசந்து எழுநாளேம்' என்றும் கூறினாள். இவ்வாற்றான் தலைமகனது பிரிதற் குறிப்பினை உணர்த்தி நின்றது.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார், யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம். இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி இன்புற்றிலமென்று தலைமகள் கூறியது.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: எம் காதலர் நேற்றுதான் பிரிந்து போனார். அப்பிரிவினால் யாமும் மேனி பசந்து பல நாட்கள் உடையேம் ஆனோம்.

Nerunatruch Chendraarem Kaadhalar Yaamum

Ezhunaalem Meni Pasandhu

Couplet

My loved one left me, was it yesterday?Days seven my pallid body wastes away

Translation

My lover parted but yesterday; With sallowness it is seventh day The Maid Tells Him

Explanation

It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு.

Nerunal Ulanoruvan Indrillai Ennum

Perumai Utaiththuiv Vulaku

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.