திருக்குறள் 1327: ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் — கூடலிற் காணப் படும்.

Thirukkural Verse 1327

திருக்குறள் 1327 — ஊடலுவகை (The Pleasures of Temporary Variance), காமத்துப்பால்.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலிற் காணப் படும்.

கலைஞர் உரை

ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார் இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்

மு. வரதராசன் உரை

ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

சாலமன் பாப்பையா உரை

ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) ஊடலில் தோற்றவர் வென்றார் - காமம் நுகர்தற்குரிய இருவருள் ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர்; அது கூடலில் காணப்படும் - அது அப்பொழுது அறியப்படாதாயினும், பின்னைப் புணர்ச்சியின்கண் அவரால் அறியப்படும். (தோற்றவர் - எதிர்தலாற்றாது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றாராயினார். மன்னும் உம்மும் அசைநிலை. 'யான் அது பொழுது சாய்தலின், இது பொழுது பேரின்பம் பெற்றேன்' என்பதாம்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: ஊடலிற் றோன்றும் சிறியதுனி, மிக்க அருள் பெறாதொழியினும் அழகு உடைத்து. புணராதொழியினும் இன்பமாமென்று கூறியவாறு.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: காமம் நுகர்வதற்குரிய இருவருள் ஊடலின்கண்ணே தோற்றவர் வென்றவராவார். அது அப்போது அறியப்படாததே யாயினும், பின்னர் புணர்ச்சியின் பொது அவரால் அறியப்படும்.

Ootalil Thotravar Vendraar Adhumannum

Kootalir Kaanap Patum

Couplet

In lovers' quarrels, 'tis the one that first gives way,That in re-union's joy is seen to win the day

Translation

The yielder wins in lover's pout Reunited joy brings it out

Explanation

Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which

Comments (2)

Adah Basu
Adah Basu
adah basu verified

1 year ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

Akarsh Salvi
Akarsh Salvi
akarsh salvi verified

1 year ago

What a beautiful thought! The poet's ability to express deep meaning in few words is just remarkable.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

Akazhvaaraith Thaangum Nilampolath Thammai

Ikazhvaarp Poruththal Thalai

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.