பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் — நன்னிலையர் ஆவர் எனின். | குறள் எண் - 1189

Thirukkural Verse 1189

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்

நன்னிலையர் ஆவர் எனின்.

கலைஞர் உரை

பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!

மு. வரதராசன் உரை

பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.

சாலமன் பாப்பையா உரை

இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின் - இப்பிரிவை யானே உடம்படும் வகை சொல்லியவர் இன்று நின் கருத்தான் நல்ல நிலையினர் ஆவாராயின்; என் மேனி பட்டாங்கு பசக்க - என் மேனி பட்டதுபடப் பசப்பதாக. (நன்னிலையராதல் - நன்மைக்கண்ணே நிற்றலை உடையராதல். 'பட்டாங்காக' என ஆக்கம் விரித்து உரைக்க. 'முன் இப்பிரிவின் கொடுமையறியாத என்னை இதற்கு உடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவே வேண்டுவது, என் மேனியும் பசப்பும் யாது செய்யின் என்'? என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: என்னுடம்பு நிலையாக என்றும் பசப்பதாக: நம்மைக் காதலித்தவரும் நம்மைப்போலத் துன்பமுறுவாராயின். இது தலைமகனது கொடுமையை உட்கொண்டு கூறியது.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: இந்தப் பிரிவை நான் உடன்படும் முறையில் சொன்ன தலைவர் நல்ல நிலையில் இருந்து வருவாரானால் என் உடம்பு பசப்பு நிறம் அடைந்தே இருக்கட்டும்.

Pasakkaman Pattaangen Meni Nayappiththaar

Nannilaiyar Aavar Enin

Couplet

Well let my frame, as now, be sicklied o'er with pain,If he who won my heart's consent, in good estate remain

Translation

Let all my body become pale If he who took my leave fares well

Explanation

If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை

எய்தலின் எய்தாமை நன்று.

Seydhemanj Chaaraach Chiriyavar Punkenmai

Eydhalin Eydhaamai Nandru

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.