தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து. | குறள் எண் - 1236

thotiyotu-tholnekizha-noval-avaraik-kotiyar-enakkooral-nondhu-1236

49

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.

"என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்"

கலைஞர் உரை

"வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்."

மு. வரதராசன் உரை

"வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: (தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தொடியோடு தோள்நெகிழ - யான் ஆற்றவும், என்வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிய; அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து நோவல் - அவற்றைக் கண்டு, நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவா நின்றேன். (ஒடு - மேல் வந்த பொருண்மைத்து. 'யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கன்று; நீ கூறுகின்றதற்கு' என்பதாம்.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும், நினக்குச் சொல்லாது யானே நோவேன்: நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து. இஃது ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றவலென்பதுபடத் தலைமகள் சொல்லியது. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: வளையல்கள் கழலுமாறுதோள்கள் மெலிந்ததால் அவரைப் பிறர் கொடியர் எனக் கூறுதலைப் பொறுக்க முடியாமல் யான் என்னுள்ளே நொந்து நிற்கின்றேன். "

வி முனுசாமி உரை

Thotiyotu Tholnekizha Noval Avaraik
Kotiyar Enakkooral Nondhu

Couplet

I grieve, 'tis pain to me to hear him cruel chid,Because the armlet from my wasted arm has slid

Translation

Arms thin, armlets loose make you call My sire cruel; that pains my soul

Explanation

I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened

49

Write Your Comment