திருக்குறள் 622: வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் — உள்ளத்தின் உள்ளக் கெடும்.

Thirukkural Verse 622

திருக்குறள் 622 — இடுக்கண் அழியாமை (Hopefulness in Trouble), பொருட்பால்.

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்.

கலைஞர் உரை

வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்

மு. வரதராசன் உரை

வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.

சாலமன் பாப்பையா உரை

வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: வெள்ளத்து அனைய இடும்பை - வெள்ளம்போலக் கரையிலவாய இடும்பைகள் எல்லாம்; அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் - அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துணையானே கெடும். (இடும்பையாவது உள்ளத்து ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை என்பதூஉம், அது மாறுபடக்கொள்ள நீங்கும் என்பதூஉம் அறிதல் வேண்டுதலின், 'அறிவுடையான்' என்றும், அவ்வுபாயத்தது எண்மை தோன்ற 'உள்ளத்தின் உள்ள' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் ஊழினான் ஆய இடுக்கணால் அழியாமைக்கு உபாயம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: வெள்ளம்போன்ற துன்பம், அறிவுடையவன் நெஞ்சினாலே வினைப்பயனென்று நினைக்கக் கெடும். இது பலவா யொருங்கு வரினும், அறிவுடையா னுற்ற இடுக்கண் கெடுமென்றது.

Vellath Thanaiya Itumpai Arivutaiyaan

Ullaththin Ullak Ketum

Couplet

Though sorrow, like a flood, comes rolling on,When wise men's mind regards it,- it is gone

Translation

Deluging sorrows come to nought When wise men face them with firm thought

Explanation

A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow

Comments (2)

Kavya Handa
Kavya Handa
kavya handa verified

1 year ago

I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.

Pihu Aurora
Pihu Aurora
pihu aurora verified

1 year ago

A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா

இன்னும் இழத்தும் கவின்.

Thunnaath Thurandhaarai Nenjaththu Utaiyemaa

Innum Izhaththum Kavin

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.