கல்வி

Learning

கல்வி (Learning) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 391–400.

திருக்குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning

திருக்குறள் 392: எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

Letters and numbers are the two eyes of man

திருக்குறள் 393: கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.

The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face

திருக்குறள் 394: உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.

It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again.)

திருக்குறள் 395: உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர்.

The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy

திருக்குறள் 396: தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning

திருக்குறள் 397: யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு.

How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country), and every town his own (tow...

திருக்குறள் 398: ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.

The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births

திருக்குறள் 399: தாமின் புறுவது உலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.

The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from it

திருக்குறள் 400: கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை.

Learning is the true imperishable riches; all other things are not riches

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

செய்யல மன்இவள் கண்.

Kotumpuruvam Kotaa Maraippin Natungagnar

Seyyala Manival Kan

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.