திருக்குறள் 411: செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் — செல்வத்து ளெல்லாந் தலை.
திருக்குறள் 411 — கேள்வி (Hearing), பொருட்பால்.
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
கலைஞர் உரை
செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்
மு. வரதராசன் உரை
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
சாலமன் பாப்பையா உரை
செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் - ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான். ( செவியான் வரும் செல்வம் - கேள்வியால் எல்லாப் பொருளையும் அறிதல். பிற செல்வங்கள் - பொருளால் வருவன. அவை நிலையா ஆகலானும், துன்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று. அவற்றை ஒழித்து இதனையே செய்க என்பது குறிப்பெச்சம்.) .
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: ஒருவற்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வருஞ் செல்வம்: அச்செல்வம் பிறசெல்வங்க ளெல்லாவற்றினும் தலையாகலான்.
வீ. முனிசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஒருவர்க்குச் சிறப்புடைய செல்வமானது செவியால் வரும் செல்வமாகும். அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றையும் விடத் தலையாய செல்வமாகும்.
Selvaththut Selvanj Chevichchelvam Achchelvam
Selvaththu Lellaan Thalai
Couplet
Wealth of wealth is wealth acquired be ear attent;Wealth mid all wealth supremely excellent
Translation
Wealth of wealths is listening's wealth It is the best of wealths on earth
Explanation
Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth
Comments (2)
Aarna Sarin
1 year ago
Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
Unnarka Kallai Unilunka Saandroraan
Ennap Pataventaa Thaar
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Tushar Brahmbhatt
1 year ago
So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.