நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும். | குறள் எண் - 553

Thirukkural Tamil & English Definition
திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்.
கலைஞர் உரை
"ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்"
மு. வரதராசன் உரை
"நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்."
சாலமன் பாப்பையா உரை
"நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்."
பாரி மேலகர் உரை
"பரிமேலழகர் உரை: நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் - தன் நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறைமையைச் செய்யாத அரசன், நாள்தொறும் நாடு கெடும் - நாள்தோறும் நாடு இழக்கும். (அரசனுக்கு நாடு, உறுப்பு ஆகலின், அதன் வினை அவன்மேல் நின்றது. இழத்தல்: பயன் எய்தாமை. 'மன்னவன் நாடு நாள்தொறும்கெடும்' என்று உரைப்பாரும் உளர்.). "
மணி குடவர் உரை
"மணக்குடவர் உரை: குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து அதற்குத் தக்க முறை செய்யாத அரசன் நாடு நாடோறும் கெடும். இது நாடு கெடுமென்றது. "
Naatorum Naati Muraiseyyaa Mannavan Naatorum Naatu Ketum
Couplet
Who makes no daily search for wrongs, nor justly rules, that kingDoth day by day his realm to ruin bring
Translation
Spy wrongs daily and do justice Or day by day the realm decays
Explanation
The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin
Write Your Comment