திருக்குறள் 433: தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் — கொள்வர் பழிநாணு வார்.

Thirukkural Verse 433

திருக்குறள் 433 — குற்றங்கடிதல் (The Correction of Faults), பொருட்பால்.

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார்.

கலைஞர் உரை

பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்

மு. வரதராசன் உரை

பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை

பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: பழி நாணுவார் - பழியை அஞ்சுவார், தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் - தம்கண் தினையின் அளவாம் குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வளவாக அன்றிப் பனையின் அளவாகக் கொள்வர். (குற்றம் சாதிப்பெயர். தமக்கு ஏலாமையின் சிறிது என்று பொறார், பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அதுவாராமல் காப்பர் என்பதாம்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: தினையளவு குற்றம் வந்ததாயினும் அதனை அவ்வளவிற்றென்று இகழாது பனையளவாகக் கொள்வர் பழிக்கு நாணுவார்.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: பழிக்கு நான்முற்று அஞ்சுபவர்கள் தினையளவு சிறிதான குற்றமானது தங்களிடத்தில் உண்டானாலும் அதனைப் பனையளவு பெரிதாகக் கருதுவார்கள்.

Thinaiththunaiyaang Kutram Varinum Panaiththunaiyaak

Kolvar Pazhinaanu Vaar

Couplet

Though small as millet-seed the fault men deem;As palm tree vast to those who fear disgrace 'twill seem

Translation

Though millet-small their faults might seem Men fearing disgrace, Palm-tall deem

Explanation

Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.

Natuvindri Nanporul Veqkin Kutipondrik

Kutramum Aange Tharum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.