படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் — மாண்பயன் எய்தல் அரிது. | குறள் எண் - 606

Thirukkural Verse 606

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது.

கலைஞர் உரை

தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்

மு. வரதராசன் உரை

நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

சாலமன் பாப்பையா உரை

நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும் - நிலம் முழுவதும் ஆண்டாரது செல்வம் தானே வந்து எய்திய இடத்தும்; மடி உடையார் மாண் பயன் எய்தல் அரிது - மடியுடையார் அதனான் மாண்ட பயனை எய்துதல் இல்லை. ('உம்மை' எய்தாமை விளக்கி நின்றது. மாண்பயன் - பேரின்பம். அச்செல்வம், அழியாமல் காக்கும் முயற்சி இன்மையின் அழியும்; அழியவே, தம் துன்பம் நீங்காது என்பதாம். இதற்கு 'நிலம் முழுதும் உடைய வேந்தர் துணையாதல் கூடிய இடத்தும்' என்று உரைப்பாரும் உளர்.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: பூமியையுடைய வேந்தர் பலபொருளினாலும் அமைந்த விடத்தும் மடியுடையாராயின், மாட்சிமைப்பட்ட பொருளைப் பெறுதல் இல்லை. இது செல்வமுண்டாயினும் கெடுவரென்றது.

Patiyutaiyaar Patramaindhak Kannum Matiyutaiyaar

Maanpayan Eydhal Aridhu

Couplet

Though lords of earth unearned possessions gain,The slothful ones no yield of good obtain

Translation

With all the wealth of lords of earth The slothful gain nothing of worth

Explanation

It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it

Comments (2)

Tanya Bobal
Tanya Bobal
tanya bobal verified

4 weeks ago

This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.

Aaryahi Kapadia
Aaryahi Kapadia
aaryahi kapadia verified

4 weeks ago

What a beautiful thought! The poet's ability to express deep meaning in few words is just remarkable.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை

ஊக்கம் அழிப்ப தரண்.

Sirukaappir Peritaththa Thaaki Urupakai

Ookkam Azhippa Tharan

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.