திருக்குறள் 591: உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் — உடையது உடையரோ மற்று.

Thirukkural Verse 591

திருக்குறள் 591 — ஊக்கம் உடைமை (Energy), பொருட்பால்.

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று.

கலைஞர் உரை

ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர் ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்

மு. வரதராசன் உரை

ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.

சாலமன் பாப்பையா உரை

ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: உடையர் எனப்படுவது ஊக்கம் - ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃதில்லார் மற்று உடையது உடையரோ - அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார். ('வேறு உடையது' என்றது, முன் எய்திநின்ற பொருளை. 'உம்' மை விகாரத்தால் தொக்கது. காக்கும் ஆற்றல் இலராகலின் அதுவும் இழப்பர் என்பதாம்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: ஒற்றரையுடைமை யென்று சொல்லப்படுவது ஊக்கமுடைமை: அஃதிலாதார் மற்றுடையதாகிய பொருளெல்லாம் உடையராகார்.

Utaiyar Enappatuvadhu Ookkam Aqdhillaar

Utaiyadhu Utaiyaro Matru

Couplet

'Tis energy gives men o'er that they own a true control;They nothing own who own not energy of soul

Translation

To own is to own energy All others own but lethargy

Explanation

Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்

உண்மை நிலக்குப் பொறை.

Kannottath Thulladhu Ulakiyal Aqdhilaar

Unmai Nilakkup Porai

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.