திருக்குறள் 448: இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் — கெடுப்பா ரிலானுங் கெடும்.
திருக்குறள் 448 — பெரியாரைத் துணைக்கோடல் (Seeking the Aid of Great Men), பொருட்பால்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
கலைஞர் உரை
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்
மு. வரதராசன் உரை
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
சாலமன் பாப்பையா உரை
தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - சுழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன், கெடுப்பார்இலானும் கெடும் - பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும். ('இல்லாத, ஏமரா' என்பன பெயரெச்ச அடுக்கு. கெடுப்பார் உளராவர் என்பது தோன்ற, 'இலானும்' என்றார். தானே கெடுதலாவது: பாகனில்லாத யானைபோல நெறியல்லா நெறிச் சென்று கெடுதல்.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: கழறுவாரை யில்லாத காவலில்லாத அரசன் தன்னைப் பகைவராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும் தான் வேண்டியவாறொழுகிக் கெடும். இஃது உயிர்க்குக் கேடு வருமென்றது.
வீ. முனிசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: நெருங்கிப் புத்தி சொல்லும் பெரியார்களைத் துணையாகக் கொள்ளாத காவலற்ற அரசன், பகையாய்க் கெடுப்பவர்கள் இல்லாவிட்டாலும் தானே கெடுவான்.
Itippaarai Illaadha Emaraa Mannan
Ketuppaa Rilaanung Ketum
Couplet
The king with none to censure him, bereft of safeguards all,Though none his ruin work, shall surely ruined fall
Translation
The careless king whom none reproves Ruins himself sans harmful foes
Explanation
The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
Veezhum Iruvarkku Inidhe Valiyitai
Pozhap Pataaa Muyakku
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.