திருக்குறள் 450: பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே — நல்லார் தொடர்கை விடல்.

Thirukkural Verse 450

திருக்குறள் 450 — பெரியாரைத் துணைக்கோடல் (Seeking the Aid of Great Men), பொருட்பால்.

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.

கலைஞர் உரை

நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்

மு. வரதராசன் உரை

நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: பல்லார் பகை கொள்ளலின் பத்து அடுத்த தீமைத்து - தான் தனியனாய் வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்று மடங்கு தீமை உடைத்து; நல்லார் தொடர் கைவிடல் - அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளாதொழிதல். (பலர் பகை ஆயக்கால் 'மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல் , பேது செய்து பிளந்திடல்' (சீவக. விமலை.32) என்பவையல்லது, ஒருங்கு வினையாக் குறித்துச் செய்தாலும் ஒருவாற்றான் உய்தல் கூடும். நல்லார் தொடர்பை விட்டால் ஒருவாற்றானும் உய்தல் கூடாமையின், இது செய்தல் அதனினும் தீது என்பதாம். இவை மூன்றுபாட்டானும் அது செய்யாத வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: பலரோடு பகைகொண்டால் எவ்வளவு துன்பமுறும்; அதனினும் பத்துமடங்கு துன்பமுறும்; பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழியின்.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: பெரியார்களது நட்பினைக் கொள்ளாமல் விட்டுவிடுதல் என்பது, பலரோடும் பகைமையினைக் கொள்ளுவதை விடப் பத்து மடங்கு தீமையுடையதாகும்.

Pallaar Pakai Kolalir Paththatuththa

Theemaiththe Nallaar Thotarkai Vital

Couplet

Than hate of many foes incurred, works greater woeTen-fold, of worthy men the friendship to forego

Translation

To give up good friends is ten times worse Than being hated by countless foes

Explanation

It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many

Comments (2)

Anika Date
Anika Date
anika date verified

1 year ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

Jayan Doctor
Jayan Doctor
jayan doctor verified

1 year ago

Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்

நாணுடையான் சுட்டே தெளிவு.

Kutippirandhu Kutraththin Neengi Vatuppariyum

Naanutaiyaan Sutte Thelivu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.