திருக்குறள் 964: தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் — நிலையின் இழிந்தக் கடை.

Thirukkural Verse 964

திருக்குறள் 964 — மானம் (Honour), பொருட்பால்.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை.

கலைஞர் உரை

மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்

மு. வரதராசன் உரை

மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை

நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: மாந்தர் - குடிப்பிறந்த மாந்தர்; நிலையின் இழிந்தக்கடை - தம் உயர்ந்த நிலையைவிட்டு அதனின்றும் தாழ்ந்த வழி; தலையின் இழிந்த மயிர் அனையர் - தலையை விட்டு அதனினின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர், {அந்நிலையை விடாது நின்ற வழிப் பேணப்படுதலும,¢ விட்டுத் தாழ்ந்த வழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: தலையினின்று இறங்கிய மயிரைப்போல இகழப்படுவர்: மாந்தர் தமது நிலையினின்று நீங்கித் தாழ ஒழுகின விடத்து.

Thalaiyin Izhindha Mayiranaiyar Maandhar

Nilaiyin Izhindhak Katai

Couplet

Like hairs from off the head that fall to earth,When fall'n from high estate are men of noble birth

Translation

Like hair fallen from head are those Who fall down from their high status

Explanation

They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை

வாயின் அதுவொப்பது இல்.

Izhukkaamai Yaarmaattum Endrum Vazhukkaamai

Vaayin Adhuvoppadhu Il

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.