திருக்குறள் 979: பெருமை பெருமிதம் இன்மை சிறுமை — பெருமிதம் ஊர்ந்து விடல்.

Thirukkural Verse 979

திருக்குறள் 979 — பெருமை (Greatness), பொருட்பால்.

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை

பெருமிதம் ஊர்ந்து விடல்.

கலைஞர் உரை

ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும் ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்

மு. வரதராசன் உரை

பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.

சாலமன் பாப்பையா உரை

பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: பெருமை பெருமிதம் இன்மை - பெருமைக்குணமாவது காரணமுண்டாய வழியும் அஃது இயல்பாதல் நோக்கித் தருக்கின்றியிருத்தல்; சிறுமை பெருமிதம் ஊர்ந்துவிடல் - சிறுமைக் குணமாவது அஃது இல்வழியும் அதனை ஏற்றுக்கொண்டு தருக்கின் முடிவின்கண்ணே நின்றுவிடுதல். ('அளவறத் தருக்குதல'¢ என்பதாயிற்று. 'விடும'¢ என்று பாடம் ஓதுவாரும் உளர், முற்றுத்தொடரும் எழுவாய்த் தொடரும் தம்முள் இயையாமையின், அது பாடமன்மை உணர்க.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: பெருமையுடையவர் நெறியினானே செய்யவல்லர்: செய்தற்கு அருமையுடைய செயல்களை. இது செய்தற்கு அரிய செய்வார் பெரியரென்றது.

Perumai Perumidham Inmai Sirumai

Perumidham Oorndhu Vital

Couplet

Greatness is absence of conceit; meanness, we deem,Riding on car of vanity supreme

Translation

Greatness is free from insolence Littleness swells with that offence

Explanation

Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness

Comments (1)

Tara Thakkar
Tara Thakkar
tara thakkar verified

1 year ago

So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற

வல்லதூஉம் ஐயம் தரும்.

Kallaadha Merkon Tozhukal Kasatara

Valladhooum Aiyam Tharum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.