திருக்குறள் 987: இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் — என்ன பயத்ததோ சால்பு.

Thirukkural Verse 987

திருக்குறள் 987 — சான்றாண்மை (Perfectness), பொருட்பால்.

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு.

கலைஞர் உரை

தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?

மு. வரதராசன் உரை

துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யக்கால் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின்; சால்பு என்ன பயத்தது - அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து? (சிறப்பு உம்மை அவர் இன்னாசெய்தற்கு இடனாதல் விளக்கி நின்றது. ஓகாரம், அசை. வினா எதிர்மறைப் பொருட்டு. தாமும் இன்னா செய்வராயின், சால்பால் ஒரு பயனுமில்லை என்பதாம். இவை ஐந்து பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: தமக்கின்னாதவற்றைச் செய்தார்க்குஞ் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின் அச்சால்பு வேறென்ன பயனை யுடைத்து.

Innaasey Thaarkkum Iniyave Seyyaakkaal

Enna Payaththadho Saalpu

Couplet

What fruit doth your perfection yield you, say!Unless to men who work you ill good repay

Translation

Of perfection what is the gain If it returns not joy for pain?

Explanation

Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?

Comments (2)

Ehsaan Chadha
Ehsaan Chadha
ehsaan chadha verified

1 year ago

A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.

Khushi Mani
Khushi Mani
khushi mani verified

1 year ago

I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்

உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

Sirainalanum Seerum Ilareninum Maandhar

Urainilaththotu Ottal Aridhu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.