திருக்குறள் 946: இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் — கழிபேர் இரையான்கண் நோய்.

Thirukkural Verse 946

திருக்குறள் 946 — மருந்து (Medicine), பொருட்பால்.

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய்.

கலைஞர் உரை

அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை

மு. வரதராசன் உரை

குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.

சாலமன் பாப்பையா உரை

குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல் - அக்குறைதலை நன்று என்று அறிந்து அவ்வாறே உண்பவன் மாட்டு இன்பம் நீங்காது நிலை நிற்குமாறு போல; கழிபேரிரையான்கண் நோய் நிற்கும் - மிகப்பெரிய இரையை விழுங்குவான் மாட்டு நோய் நீங்காது நிலைநிற்கும். (அவ்வாறே உண்டல் - உண்ணலாம் அளவில் சிறிது குறையஉண்டல். இன்பமாவது வாதமுதலிய மூன்றும் தத்தம் நிலையில் திரியாமையின் மனம் மொழி மெய்கள் அவன் வயத்தவாதலும், அதனான் அறம் முதலிய நான்கும் எய்தலும் ஆம். இரையை அளவின்றி எடுத்து அதனான் வருந்தும் விலங்கொடு ஒத்தலின் 'இரையான்'என்றார். விதி எதிர்மறைகளை உவமமும் பொருளும் ஆக்கியது இரண்டானும் பெறுதற்கு.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: அறும் அளவறிந்து உண்பவன்கண் இன்பம்போல உண்டாம், மிக உண்பான்கண் நோய்.

Izhivarindhu Unpaankan Inpampol Nirkum

Kazhiper Iraiyaankan Noi

Couplet

On modest temperance as pleasures pure,So pain attends the greedy epicure

Translation

Who eats with clean stomach gets health With greedy glutton abides ill-health

Explanation

As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously

Comments (1)

Ivana Apte
Ivana Apte
ivana apte verified

1 year ago

This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்

திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

Aranarindhu Aandramaindha Sollaanenj Gnaandrun

Thiranarindhaan Therchchith Thunai

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.