தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும். | குறள் எண் - 947

Thirukkural Tamil & English Definition
திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்.
கலைஞர் உரை
"பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்"
மு. வரதராசன் உரை
"பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்."
சாலமன் பாப்பையா உரை
"தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்."
பாரி மேலகர் உரை
"பரிமேலழகர் உரை: தெரியான் தீ அளவு அன்றிப் பெரிது உண்ணின் - தன் பகுதியும் அதற்கு ஏற்ற உணவும் காலமும் ஆராயாது, வேண்டியதோர் உணவை வேண்டியதோர் காலத்து, வயிற்றுத் தீ அளவன்றி ஒருவன் உண்ணுமாயின்; நோய் அளவு இன்றிப் படும் - அவன் மாட்டு நோய்கள் எல்லையற வளரும். (தெரியாமை வினைக்குச் செயப்படு பொருள்கள் அதிகாரத்தான் வந்தன. நோய் - சாதியொருமை. இவை இரண்டு பாட்டானும் அவ்வகை உண்ணாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.). "
மணி குடவர் உரை
"மணக்குடவர் உரை: பசியின் அளவின்றி ஆராயாதே மிகவுண்பானாயின் மிகநோய் உண்டாம். இது, நோய் தீர்ந்தாலும் பசியளவு அறியாதே உண்பானாயின் மீண்டும் நோயா மாதலான் அளவறிந்து உண்ணல் வேண்டுமென்றது. "
Theeyala Vandrith Theriyaan Peridhunnin Noyala Vindrip Patum
Couplet
Who largely feeds, nor measure of the fire within maintains,That thoughtless man shall feel unmeasured pains
Translation
who glut beyond the hunger's fire Suffer from untold diseases here
Explanation
He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health)
Write Your Comment