z

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல். | குறள் எண் - 949

utraan-alavum-piniyalavum-kaalamum-katraan-karudhich-cheyal-949

104

Thirukkural Tamil & English Definition

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

கலைஞர் உரை

"நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்"

மு. வரதராசன் உரை

"மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்."

சாலமன் பாப்பையா உரை

"மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்."

பாரி மேலகர் உரை

"பரிமேலழகர் உரை: கற்றான் - ஆயுள் வேதத்தினைக் கற்ற மருத்துவன்; உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் கருதிச் செயல் - அவ்வுபாயத்தினைச் செய்யுங்கால், ஆதுரன் அளவினையும் அவன்கண் நிகழ்கின்ற நோயின் அளவினையும் தன்செயற்கு ஏற்ற காலத்தினையும் அந்நூல் நெறியால் நோக்கி, அவற்றோடு பொருந்தச் செய்க. (ஆதுரன் அளவு - பகுதி பருவம் வேதனை வலிகளின் அளவு. பிணி அளவு - சாத்தியம், அசாத்தியம், யாப்பியம் என்னும் சாதிவேறுபாடும், தொடக்க நடு ஈறு என்னும் அதன் பருவ வேறுபாடும், வன்மை மென்மைகளும் முதலாயின. காலம் - மேற்சொல்லியன. இம் மூன்றும் பிழையாமல் நூல் நெறியானும் உணர்வு மிகுதியானும் அறிந்து செய்க என்பார், 'கற்றான் கருதிச் செயல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவ்விழுக்குப் பட்டுழி மருத்துவன் தீர்க்குமாறு கூறப்பட்டது.). "

மணி குடவர் உரை

"மணக்குடவர் உரை: நோயுற்றவனது அளவும் நோயினது அளவும் அதுபற்றிய காலமும் அறிந்து அதற்குத்தக்கவாறு மருந்து செய்க: ஆயுள் வேதம் வல்லவன். "

Utraan Alavum Piniyalavum Kaalamum
Katraan Karudhich Cheyal

Couplet

The habitudes of patient and disease, the crises of the illThese must the learned leech think over well, then use his skill

Translation

Let the skilful doctor note The sickmen, sickness, season and treat

Explanation

The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment)

104

Write Your Comment