திருக்குறள் 840: கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் — குழாஅத்துப் பேதை புகல்.

Thirukkural Verse 840

திருக்குறள் 840 — பேதைமை (Folly), பொருட்பால்.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்

குழாஅத்துப் பேதை புகல்.

கலைஞர் உரை

அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது

மு. வரதராசன் உரை

சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: சான்றோர் குழாத்துப் பேதை புகல் - சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல்; கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று - தூய அல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளிக்கண்ணே வைத்தாற் போலும். (கழுவாக்கால் என்பது இடக்கரடக்கு. இதனால் அவ்வமளியும் இழிக்கப்படுமாறு போல, இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம். இதனான், அவன் அவையிடை இருக்குமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: கழுவாத காலைப் பள்ளியின்கண் வைத்தாற்போலும், சான்றோர் அவையின்கண் பேதை புகுந்து கூடியிருத்தல். இது பேதை யிருந்த அவை யிகழப்படுமென்றது.

Kazhaaakkaal Palliyul Vaiththatraal Saandror

Kuzhaaaththup Pedhai Pukal

Couplet

Like him who seeks his couch with unwashed feet,Is fool whose foot intrudes where wise men meet

Translation

Entrance of fools where Savants meet Looks like couch trod by unclean feet

Explanation

The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bed

Comments (2)

Samarth Kumar
Samarth Kumar
samarth kumar verified

1 year ago

This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.

Samarth Singhal
Samarth Singhal
samarth singhal verified

1 year ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமந் தரும்.

Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin

Uyyaa Vizhuman Tharum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.