திருக்குறள் 836: பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் — பேதை வினைமேற் கொளின்.

Thirukkural Verse 836

திருக்குறள் 836 — பேதைமை (Folly), பொருட்பால்.

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்

பேதை வினைமேற் கொளின்.

கலைஞர் உரை

நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்

மு. வரதராசன் உரை

ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.

சாலமன் பாப்பையா உரை

செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: கை அறியாப் பேதை வினைமேற் கொளின் - செய்யும் முறைமை அறியாத பேதை ஒரு கருமத்தை மேற்கொள்வானாயின், பொய்படும் ஒன்றோ புனைபூணும் - அதுவும் புரைபடும், தானும் தளை பூணும். (புரைபடுதல் - பின் ஆகாவகை உள்ளழிதல். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். அதனையும் கெடுத்துத் தானும் கெடும் என்பதாம். இதனான் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: ஒழுக்கமறியாதா னொருபேதையான் ஒருகருமத்தை மேற்கொண்டானாயின், அப்பொழுது பொய்யனென்னவும் பட்டுப் பிறர்க்குப் புனைபூணும். புனைபூணல் - சிறைபடுதல்.

Poipatum Ondro Punaipoonum Kaiyariyaap

Pedhai Vinaimer Kolin

Couplet

When fool some task attempts with uninstructed pains,It fails; nor that alone, himself he binds with chains

Translation

A know-nothing fool daring a deed Not only fails but feels fettered

Explanation

If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail (But) is it all ? He will even adorn himself with fetters

Comments (1)

Lakshit Yogi
Lakshit Yogi
lakshit yogi verified

1 year ago

Aathichudi always leaves a strong impression on me. This one teaches discipline in such a simple yet effective way.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாடொறும் நாடு கெடும்.

Naatorum Naati Muraiseyyaa Mannavan

Naatorum Naatu Ketum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.