திருக்குறள் 905: இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் — நல்லார்க்கு நல்ல செயல்.

Thirukkural Verse 905

திருக்குறள் 905 — பெண்வழிச் சேறல் (Being led by Women), பொருட்பால்.

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்

நல்லார்க்கு நல்ல செயல்.

கலைஞர் உரை

எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்

மு. வரதராசன் உரை

மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

சாலமன் பாப்பையா உரை

தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: இல்லாளை அஞ்சுவான் - தன் மனையாளை அஞ்சுவான்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - தான் தேடிய பொருளே யாயினும் அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும். (நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். அது செய்யவேண்டும் நாள்களினும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். 'இல்லாளை அஞ்சி விருந்தின் முகங்கொன்ற நெஞ்சின், புல்லாளனாக'(சீவக.மண்மகள்.217) என்றார் பிறரும்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: மனையாளை அஞ்சுவான், எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்லவை செய்தலை அஞ்சும். இஃது அறஞ்செய்ய மாட்டானென்றது.

Illaalai Anjuvaan Anjumar Regngnaandrum

Nallaarkku Nalla Seyal

Couplet

Who quakes before his wife will ever tremble too,Good deeds to men of good deserts to do

Translation

Who fears his wife fears always Good to do to the good and wise

Explanation

He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good

Comments (2)

Neelofar Vig
Neelofar Vig
neelofar vig verified

1 year ago

This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.

Aayush Bansal
Aayush Bansal
aayush bansal verified

1 year ago

Aathichudi always leaves a strong impression on me. This one teaches discipline in such a simple yet effective way.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி

வாடினும் பாடு பெறும்.

Ootalin Thondrum Sirudhuni Nallali

Vaatinum Paatu Perum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.