திருக்குறள் 919: வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் — பூரியர்கள் ஆழும் அளறு.
திருக்குறள் 919 — வரைவின் மகளிர் (Wanton Women), பொருட்பால்.
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
கலைஞர் உரை
விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் ``நரகம்'' எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை
மு. வரதராசன் உரை
ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.
சாலமன் பாப்பையா உரை
வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும்.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: வரைவு இலா மாண் இழையார் மென்தோள் - உயர்ந்தோர் இழிந்தோர் என்னாது, விலை கொடுப்பார் யாவரையும் முயங்கும் மகளிரது மெல்லிய தோள்கள்; புரை இலாப் பூரியர்கள் ஆழும் அளறு - அக்குற்றத்தையறியும் அறிவில்லாத கீழ்மக்கள் புக்கு அழுந்தும் நிரயம். (உயர்தற்கு ஏதுவாகலின், 'புரை' எனப்பட்டது. சாதியான் இழிந்தாரின் நீக்குவதற்குப் 'புரை இலாப் பூரியர்கள்' என்றும், அவர் ஆழ்தற்கு ஏதுவாகிய உருவம் முதலிய மூன்றும் என்பது தோன்ற 'மாணிழையார் மென்தோள்' என்றும், அவர்க்கு அளற்றினை இடையின்றிப் பயக்கும் என்பது தோன்ற உருவகமாக்கியும் கூறினார்.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: முயக்கத்தில் வரைவில்லாத மாணிழையாரது மெல்லிய தோளாவது, உயர்வில்லாத கயவர் அழுந்தும் நரகம். இஃது இழிந்தார் சார்வரென்றது.
Varaivilaa Maanizhaiyaar Mendhol Puraiyilaap
Pooriyarkal Aazhum Alaru
Couplet
The wanton's tender arm, with gleaming jewels decked,Is hell, where sink degraded souls of men abject
Translation
The soft jewelled arms of whores are hell Into which the degraded fall
Explanation
The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base
Comments (2)
Ivan Jha
1 year ago
So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
Oththa Tharavon Uyirvaazhvaan Matraiyaan
Seththaarul Vaikkap Patum
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Aaina Sekhon
1 year ago
So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.