திருக்குறள் 775: விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் — ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
திருக்குறள் 775 — படைச் செருக்கு (Military Spirit), பொருட்பால்.
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
கலைஞர் உரை
களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்
மு. வரதராசன் உரை
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.
சாலமன் பாப்பையா உரை
பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: விழித்த கண் - பகைவரை வெகுண்டு நோக்கிய கண்; வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின் - அவர் வேலைக்கொண்டு எறிய அஃது ஆற்றாது அந்நோக்கை அழித்து இமைக்குமாயின்; வன்கணவர்க்கு ஒட்டு அன்றோ - அது வீரர்க்குப் புறங்கொடுத்தலாம். (அவ்வெகுளி நோக்கம் மீட்டலும் போரின்கண் மீட்சி எனக்கருதி அதுவும் செய்யார் என்பதாம்.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: மாற்றாரோடு எதிர்த்துச் சிவந்து நோக்கின கண்ணிலே ஒரு வேலினாலே எறிய, அதற்கு மீண்டும் இமைப்பாராயின் அஃது அஞ்சாதார்க்குக் கெட்டதனோடு ஒக்கும். விழித்தகண் என்பதற்கு மாற்றானை நோக்கி யிமையாத கண் எனினும் அமையும்.
Vizhiththakan Velkona Teriya Azhiththimaippin
Ottandro Vanka Navarkku
Couplet
To hero fearless must it not defeat appear,If he but wink his eye when foemen hurls his spear
Translation
When lances dart if heroes wink \"It is a rout\" the world will think
Explanation
Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe) ?
Comments (2)
Kabir Suresh
1 year ago
This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
Ularennum Maaththiraiyar Allaal Payavaak
Kalaranaiyar Kallaa Thavar
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Dhanuk Balasubramanian
1 year ago
This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.