எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு. | குறள் எண் - 1208

enaiththu-ninaippinum-kaayaar-anaiththandro-kaadhalar-seyyum-sirappu-1208

22

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

"எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?"

கலைஞர் உரை

"காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!"

மு. வரதராசன் உரை

"அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!"

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: (இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பம் செய்வர் என்றாட்குச் சொல்லியது.) எனைத்து நினைப்பினும் காயார் - தம்மை யான் எத்துணையும் மிக நினைந்தாலும் அதற்கு வெகுளார்; காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ-காதலர் எனக்குச் செய்யும் இன்பமாவது அவ்வளவன்றோ? (வெகுளாமை:அதற்கு உடன்பட்டு நெஞ்சின் கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின் அதனைச் 'சிறப்பு' என்றாள். 'காதலர் நம்மாட்டருள்' என்றும் 'செய்யுங் குணம்' என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறிய அதனைக் குறிப்பான் இகழ்ந்து கூறியவாறு.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: யாம் காதலரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்; அவ்வளவன்றோ அவர் செய்யும் அருள். அருள் செய்தலாவது குற்றம் கண்டாலும் வெகுளாமை. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தலைவரை யான் எத்துணை அதிகமாக நினைத்தாலும் அதற்க்கு அவர் கோபிக்கமாட்டார். அதனால் காதலர் எனக்குச் செய்யும் சிறப்பான இன்பம் அத்தகையதல்லவா?. "

வி முனுசாமி உரை

Enaiththu Ninaippinum Kaayaar Anaiththandro
Kaadhalar Seyyum Sirappu

Couplet

My frequent thought no wrath excites It is not so?This honour doth my love on me bestow

Translation

I bring him to ceaseless memory He chides not; and thus honours me

Explanation

He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved

22

Write Your Comment