திருக்குறள் 78: அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் — வற்றல் மரந்தளிர்த் தற்று.
திருக்குறள் 78 — அன்புடைமை (The Possession of Love), அறத்துப்பால்.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
கலைஞர் உரை
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது
மு. வரதராசன் உரை
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை
மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை - மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்; வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று - வன்பாலின்கண்வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும். ( கூடாது என்பதாம். வன்பால் - வல்நிலம். வற்றல் என்பது பால் விளங்கா அஃறிணைப் படர்க்கைப் பெயர்.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை வலிய பாரிடத்து (பாறை) உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும். தளிர்த்தற்குக் காரணமின்மையால் தளிராதென்றவாறு.
வீ. முனிசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: மனத்தில் அன்பில்லாதவரது உயிர்வாழ்க்கை வலிய பாலை நிலத்தில் பட்டுப்போன மரமானது தளிர்த்தது போன்றதாகும்.
Anpakath Thillaa Uyirvaazhkkai Vanpaarkan
Vatral Marandhalirth Thatru
Couplet
The loveless soul, the very joys of life may know,When flowers, in barren soil, on sapless trees, shall blow
Translation
Life bereft of love is gloom Can sapless tree in desert bloom?
Explanation
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert
Comments (2)
Advik Doshi
1 year ago
I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
Ullam Utaimai Utaimai Porulutaimai
Nillaadhu Neengi Vitum
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Jayant Dara
1 year ago
What a beautiful thought! The poet's ability to express deep meaning in few words is just remarkable.