திருக்குறள் 98: சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் — இம்மையும் இன்பம் தரும்.

Thirukkural Verse 98

திருக்குறள் 98 — இனியவை கூறல் (The Utterance of Pleasant Words), அறத்துப்பால்.

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பம் தரும்.

கலைஞர் உரை

சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்

மு. வரதராசன் உரை

பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .

சாலமன் பாப்பையா உரை

பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: சிறுமையுள் நீங்கிய இன்சொல் - பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்; மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும். (மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள் இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: பிறர்க்குத் துன்பம் செய்யாத இனிய சொற்கள் மறுமையிலும் இம்மையிலும் இன்பத்தினைக் கொடுப்பதாகும்.

Sirumaiyul Neengiya Insol Marumaiyum

Immaiyum Inpam Tharum

Couplet

Sweet kindly words, from meanness free, delight of heart,In world to come and in this world impart

Translation

Kind words free from meanness delight This life on earth and life the next

Explanation

Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next

Comments (1)

Seher Barman
Seher Barman
seher barman verified

1 year ago

Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.

Ilvaazhvaan Enpaan Iyalputaiya Moovarkkum

Nallaatrin Nindra Thunai

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.