திருக்குறள் 112: செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி — எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
திருக்குறள் 112 — நடுவு நிலைமை (Impartiality), அறத்துப்பால்.
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
கலைஞர் உரை
நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்
மு. வரதராசன் உரை
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
சாலமன் பாப்பையா உரை
நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: செப்பம் உடையவன் ஆக்கம் - நடுவு நிலைமையை உடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து. (விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்கும் துணையும் அவன்றனக்கும் ஏமாப்பு உடைத்து என்பது பெற்றாம். அறத்தோடு வருதலின், அன்னதாயிற்று. தான் இறந்தவழி எஞ்சி நிற்பதாகலின் 'எச்சம்' என்றார்.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: நடுவு நிலைமை யுடையவனது செல்வம் தன்னளவிலுங் கேடின்றியே நின்று, தன் வழியுள்ளார்க்குங் கேடுவாராமற் காவலாதலையுடைத்து. நடுவுநிலைமையுடையார் செல்வம் அழியாதென்றவாறு.
வீ. முனிசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: நடுவு நிலைமையுடையவனது செல்வமானது அழிவில்லாமல் அவன் வழியில் வருவோர்க்குப் பாதுகாப்பான உறுதியாதலை உடையதாகும்.
Seppam Utaiyavan Aakkanj Chidhaivindri
Echchaththir Kemaappu Utaiththu
Couplet
The just man's wealth unwasting shall endure,And to his race a lasting joy ensure
Translation
Wealth of the man of equity Grows and lasts to posterity
Explanation
The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
Ullam Utaimai Utaimai Porulutaimai
Nillaadhu Neengi Vitum
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.