திருக்குறள் 213: புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே — ஒப்புரவின் நல்ல பிற.
திருக்குறள் 213 — ஒப்புரவறிதல் (Duty to Society), அறத்துப்பால்.
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
கலைஞர் உரை
பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ``ஒப்புரவு'' என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது
மு. வரதராசன் உரை
பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.
சாலமன் பாப்பையா உரை
தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: புத்தேள் உலகத்தும் ஈண்டும் - தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும், ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது - ஒப்புரவுபோல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது. ( ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லோரும் ஒரு தன்மையராகலின் புத்தேள் உலகத்து அரிதாயிற்று, யாவர்க்கும் ஒப்பது இது போல் பிறிதொன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. 'பெறற்கரிது' என்று பாடம் ஓதி, 'பெறுதற்குக் காரணம் அரிது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: ஒப்புரவு செய்தலின் நன்றாயிருப்பது தேவருலகத்தினும் இவ்வுலகத்தினும் பெறுதற்கு அரிதாம்.
வீ. முனிசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: புத்தேள் உலகத்திலும் இவ்வுலகத்தில் ஒப்புரவு போல (பிறர்க்கு உதவி செய்தல் போல) நல்ல பிற செயல்களைப் பெறுதல் அரிதாகும்.
Puththe Lulakaththum Eentum Peralaridhe
Oppuravin Nalla Pira
Couplet
To 'due beneficence' no equal good we know,Amid the happy gods, or in this world below
Translation
In heav'n and earth 'tis hard to find A greater good than being kind
Explanation
It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
Pullaa Thiraaap Pulaththai Avar
Urum Allalnoi Kaankam Siridhu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Zeeshan D’Alia
1 year ago
This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.