திருக்குறள் 193: நயனிலன் என்பது சொல்லும் பயனில — பாரித் துரைக்கும் உரை.

Thirukkural Verse 193

திருக்குறள் 193 — பயனில சொல்லாமை (Against Vain Speaking), அறத்துப்பால்.

நயனிலன் என்பது சொல்லும் பயனில

பாரித் துரைக்கும் உரை.

கலைஞர் உரை

பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்

மு. வரதராசன் உரை

ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

சாலமன் பாப்பையா உரை

பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே, நயன் இலன் என்பது சொல்லும் - இவன் நீதி இலன் என்பதனை உரைக்கும். (உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: நயனுடைய னல்லனென்பதனை யறிவிக்கும், பயனில்லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள், இது பயனில சொல்வார் இம்மையின்கண் பிறரால் இயம்பப் படாரென்றது.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: பயனொன்றும் இல்லாதவற்றை ஒருவன் விரிவுப்படுத்தி உரைக்கின்ற உரையானது அவன் நீதி இல்லாதவன் என்பதனைச் சொல்லிக் காட்டும்.

Nayanilan Enpadhu Sollum Payanila

Paarith Thuraikkum Urai

Couplet

Diffusive speech of useless words proclaimsA man who never righteous wisdom gains

Translation

The babbler's hasty lips proclaim That \"good-for-nothing\" is his name

Explanation

That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue."

Comments (2)

Kimaya Gandhi
Kimaya Gandhi
kimaya gandhi verified

1 year ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

Jivin Bedi
Jivin Bedi
jivin bedi verified

1 year ago

I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு.

Ezhumai Ezhupirappum Ulluvar Thangan

Vizhuman Thutaiththavar Natpu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.