அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் — புன்மையாற் காணப் படும். | குறள் எண் - 185
Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.
கலைஞர் உரை
ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்
மு. வரதராசன் உரை
அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.
சாலமன் பாப்பையா உரை
அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறம் சொல்லுவான் ஒருவன் அறனை நன்றென்று சொல்லினும் அது தன் மனத்தானாச் சொல்லுகின்றானல்லன் என்பது; புறம் சொல்லும் புன்மையால் காணப்படும் - அவன் புறஞ் சொல்லுதற்குச் காரணமான மனப்புன்மையானே அறியப்படும். (மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனமுடையனல்லாமை, அவன் பிறரைப் புறஞ்சொல்லும் புல்லியகுண மேதுவாக அறியப்படும். இஃது இதனைச் சொல்லுவார் அறமறியா ரென்றது.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: அறம் நல்லதென்று வாயினால் பேசுகின்றவனுடைய மனத்தில் அறத் தன்மை இல்லாதிருப்பதை அவன் புறங்கூறுவதற்குக் காரணமான புன்மைத்தன்மையினால் கண்டுகொள்ளப்படும்.
Aranjollum Nenjaththaan Anmai Puranjollum
Punmaiyaar Kaanap Patum
Couplet
The slanderous meanness that an absent friend defames,'This man in words owns virtue, not in heart,' proclaims
Translation
Who turns to slander makes it plain His praise of virtue is in vain
Explanation
The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back
Comments (2)
Zain Dara
2 months ago
Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.
Mananalam Nankutaiya Raayinum Saandrorkku
Inanalam Emaap Putaiththu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Ryan Trivedi
2 months ago
A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.