திருக்குறள் 60: மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் — நன்கலம் நன்மக்கட் பேறு.
திருக்குறள் 60 — வாழ்க்கைத் துணைநலம் (The Worth of a Wife), அறத்துப்பால்.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
கலைஞர் உரை
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது
மு. வரதராசன் உரை
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை
ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: மங்கலம் என்ப மனை மாட்சி - ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு - அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை. ('அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: ஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்கமுடையாளாதலை: அவ்வழகின்மேலே நல்ல அணிகலனென்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை.
வீ. முனிசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: மனைவியினுடைய நற்குண நற்செயல்களை இல்லறத்திற்கு மங்கலம் என்று கூறுவர். அந்த மங்கலத்திற்கு நன்மக்கள் பெறுதலை அணிகலம் என்று கூறுவர்.
Mangalam Enpa Manaimaatchi Matru
Adhan Nankalam Nanmakkat Peru
Couplet
The house's 'blessing', men pronounce the house-wife excellent;The gain of blessed children is its goodly ornament
Translation
An honest wife is home's delight And children good are jewels abright
Explanation
The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
Suvaioli Ooruosai Naatramendru Aindhin
Vakaidherivaan Katte Ulaku
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.