திருக்குறள் 40: செயற்பால தோரும் அறனே ஒருவற்கு — உயற்பால தோரும் பழி.

Thirukkural Verse 40

திருக்குறள் 40 — அறன் வலியுறுத்தல் (Assertion of the Strength of Virtue), அறத்துப்பால்.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.

கலைஞர் உரை

பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்

மு. வரதராசன் உரை

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: ஒருவற்குச் செயற்பாலது அறனே - ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே- ஒழிதற்பான்மையது தீவினையே. ( 'ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே, தப்பும் பகுதியது பழியே. மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார், அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார்.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஒருவர்க்குச் செய்யும் தன்மையுடையன அறச்செயல்களே ஆகும், நீக்கவேண்டிய தன்மையுடையன தீயவைகளான செயல்களேயாகும்.

Seyarpaala Thorum Arane Oruvarku

Uyarpaala Thorum Pazhi

Couplet

'Virtue' sums the things that should be done;'Vice' sums the things that man should shun

Translation

Worthy act is virtue done Vice is what we ought to shun

Explanation

That is virtue which each ought to do, and that is vice which each should shun

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை

மாயும்என் மாயா உயிர்.

Porulmaalai Yaalarai Ulli Marulmaalai

Maayumen Maayaa Uyir

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.