திருக்குறள் 22: துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து — இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

Thirukkural Verse 22

திருக்குறள் 22 — நீத்தார் பெருமை (The Greatness of Ascetics), அறத்துப்பால்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

கலைஞர் உரை

உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது

மு. வரதராசன் உரை

பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

சாலமன் பாப்பையா உரை

ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: துறந்தார் பெருமை துணைக் கூறின் - இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும். (முடியாது என்பதாம், 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: காம முதலாகத் துறந்தார் பெருமைக்கு அளவு கூறின் உலகத்துப் பிறந்திறந்தாரை இத்துணையாரென்று எண்ணி யறியலுற்றாற் போலும். து பெருமைக்கெல்லை கூறுத லரிதாயினுஞ் சில சொல்லப் புகாநின்றே னென்றது கருதிக் கூறிற்று.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: முனிவர்களது பெருமையினை எண்ணிப்பார்த்து இவ்வளவென்று கூறப்புகுந்தால், அச்செயல் இவ்வுலகில் இதுவரை இறந்தவர்களை எண்ணியறிய முயன்றது போன்றதாகும்.

Thurandhaar Perumai Thunaikkoorin Vaiyaththu

Irandhaarai Ennikkon Tatru

Couplet

As counting those that from the earth have passed away,'Tis vain attempt the might of holy men to say

Translation

To con ascetic glory here Is to count the dead upon the sphere

Explanation

To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்.

Nalaththinkan Naarinmai Thondrin Avanaik

Kulaththinkan Aiyap Patum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.