நீத்தார் பெருமை
The Greatness of Ascetics
நீத்தார் பெருமை (The Greatness of Ascetics) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 21–30.
திருக்குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their stat...
திருக்குறள் 22: துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead
திருக்குறள் 23: இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others)
திருக்குறள் 24: உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven
திருக்குறள் 25: ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses
திருக்குறள் 26: செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
The great will do those things which is difficult to be done; but the mean cannot do them
திருக்குறள் 27: சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell
திருக்குறள் 28: நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world
திருக்குறள் 29: குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted
திருக்குறள் 30: அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.
Kanniraindha Kaarikaik Kaamperdhot Pedhaikkup
Penniraindha Neermai Peridhu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.