திருக்குறள் 336: நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் — பெருமை உடைத்துஇவ் வுலகு.

Thirukkural Verse 336

திருக்குறள் 336 — நிலையாமை (Instability), அறத்துப்பால்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு.

கலைஞர் உரை

இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்

மு. வரதராசன் உரை

நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

சாலமன் பாப்பையா உரை

நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: ஒருவன் நெருதல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து; - ஒருவன் நெருநல் உளனாயினான் , அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து, இவ்வுலகு - இவ்வுலகம். '(ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண்பாற்கே கூறினார். இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து. இது யாக்கை நிலையாமை கூறிற்று.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஒருவன் நேற்றைய தினம் இருந்தான். இன்றைய தினம் இல்லாமற் போனான் என்று கூறப்படும் நிலையாமை மிகுதியினை உடையதாகும் இவ்வுலகு.

Nerunal Ulanoruvan Indrillai Ennum

Perumai Utaiththuiv Vulaku

Couplet

Existing yesterday, today to nothing hurled!-Such greatness owns this transitory world

Translation

One was yesterday; not today!

Explanation

This world possesses the greatness that one who yesterday was is not today

Comments (1)

Miraan Choudhary
Miraan Choudhary
miraan choudhary verified

1 year ago

This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு.

Kaanaadhaan Kaattuvaan Thaankaanaan Kaanaadhaan

Kantaanaam Thaankanta Vaaru

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.