புலால் மறுத்தல்

Abstinence from Flesh

புலால் மறுத்தல் (Abstinence from Flesh) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 251–260.

திருக்குறள் 251: தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்?

How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures

திருக்குறள் 252: பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி

ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh

திருக்குறள் 253: படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்

உடல்சுவை உண்டார் மனம்.

Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard f...

திருக்குறள் 254: அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்

பொருளல்லது அவ்வூன் தினல்.

If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the fl...

திருக்குறள் 255: உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு.

Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fa...

திருக்குறள் 256: தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money

திருக்குறள் 257: உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

புண்ணது உணர்வார்ப் பெறின்.

If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it

திருக்குறள் 258: செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal

திருக்குறள் 259: அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று.

Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc, in a thousand sacrifices

திருக்குறள் 260: கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிருந் தொழும்.

All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

Murimeni Muththam Muruval Verinaatram

Velunkan Veyththo Lavatku

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.