திருக்குறள் 269: கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் — ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.

Thirukkural Verse 269

திருக்குறள் 269 — தவம் (Penance), அறத்துப்பால்.

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.

கலைஞர் உரை

எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்

மு. வரதராசன் உரை

தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்

சாலமன் பாப்பையா உரை

தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: கூற்றம் குதித்தலும் கைகூடும் - கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம், நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு. ( சிறப்பு உம்மை கூடாமை விளக்கிற்று. மன் உயிர் எல்லாம் தொழுதலேயன்றி இதுவும் கைகூடும் என எச்ச உம்மையாக உரைப்பினும் அமையும். ஆற்றல் - சாப அருள்கள். இவை நான்கு பாட்டானும் தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: கூற்றத்தைத் தப்புதலுங் கைகூடும்; தவத்தினாகிய வலியைக் கூடினார்க்கு. இது மார்க்கண்டேயன் தப்பினாற்போல வென்றது.

Kootram Kudhiththalum Kaikootum Notralin

Aatral Thalaippat Tavarkkul

Couplet

E'en over death the victory he may gain,If power by penance won his soul obtain

Translation

They can even defy death Who get by penance godly strenth

Explanation

Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death)

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்

மாசூர மாய்ந்து கெடும்.

Kutiyennum Kundraa Vilakkam Matiyennum

Maasoora Maaindhu Ketum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.