வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் — ஈண்டு முயலப் படும். | குறள் எண் - 265

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
கலைஞர் உரை
உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்
மு. வரதராசன் உரை
விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.
சாலமன் பாப்பையா உரை
விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் - முயன்றால் மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம் ஆதலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் - செய்யப்படுவதாய தவம் இம்மைக்கண் அறிவுடையோரான் முயலப்படும். ('ஈண்டு' என்பதனான் 'மறுமைக்கண்' என்பது பெற்றாம். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தானன்றி எய்தப்படா என்பதாம். இவை நான்கு பாட்டானும் தவத்தது சிறப்புக் கூறப்பட்டது.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: விரும்பின விரும்பினபடியே வருதலால், தவஞ்செய்தலை இவ்விடத்தே முயல வேண்டும். இது போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: வேண்டிய பயன்களை வேண்டியபடியே பெறலாம் ஆனபடியால் செய்யப்படுவதாகிய தவம் இப்பிறப்பில் முயன்று செய்யப்படும்.
Ventiya Ventiyaang Keydhalaal Seydhavam
Eentu Muyalap Patum
Couplet
That what they wish may, as they wish, be won,By men on earth are works of painful 'penance' done
Translation
What they wish as they wish is won Here hence by men penance is done
Explanation
Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come)
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.
Viller Uzhavar Pakaikolinum Kollarka
Soller Uzhavar Pakai
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Madhav Vora
4 weeks ago
Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.