உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும் இவ் வூர். | குறள் எண் - 1130

uvandhuraivar-ullaththul-endrum-ikandhuraivar-edhilar-ennum-iv-voor-1130

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும் இவ் வூர்.

"காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்."

மு. வரதராசன் உரை

"என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்."

சாலமன் பாப்பையா உரை

"காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு"

கலைஞர் உரை

Uvandhuraivar Ullaththul Endrum Ikandhuraivar
Edhilar Ennum Iv Voor

Couplet

Rejoicing in my very soul he ever lies;'Her love estranged is gone far off!' the village cries

Translation

He abides happy in my heart But people mistake he is apart

Explanation

My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar

கருத்துகள்

avatar
Ranjith

Posted on 14 Sep 2024

Super kural

கருத்து தெரிவிக்கவும்

தொடர்புடைய திருக்குறள்கள்

paalotu-thenkalan-thatre-panimozhi-vaaleyiru-ooriya-neer-1121

குறள் எண் - 1121

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்.

மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

utampotu-uyiritai-ennamar-ranna-matandhaiyotu-emmitai-natpu-1122

குறள் எண் - 1122

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு.

இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.

karumaniyir-paavaainee-podhaayaam-veezhum-thirunudharku-illai-itam-1123

குறள் எண் - 1123

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம்.

என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.

vaazhdhal-uyirkkannal-aayizhai-saadhal-adharkannal-neengum-itaththu-1124

குறள் எண் - 1124

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து.

ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.