திருக்குறள் 1136: மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற — படல்ஒல்லா பேதைக்கென் கண்.
திருக்குறள் 1136 — நாணுத் துறவுரைத்தல் (The Abandonment of Reserve), காமத்துப்பால்.
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.
கலைஞர் உரை
காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்
மு. வரதராசன் உரை
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.
சாலமன் பாப்பையா உரை
அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: ('மடலூரும் பொழுது இற்றைக்கும் கழிந்தது' என்றாட்குச் சொல்லியது) பேதைக்கு என் கண் படல் ஒல்லா - நின்பேதை காரணமாக என் கண்கள் ஒருகாலுந் துயிலைப் பொருந்தா; யாமத்தும் மன்ற மடலூர்தல் உள்ளுவேன் - அதனால் எல்லாரும் துயிலும் இடையாமத்தும் யான் இருந்து மடலூர்தலையே கருதாநிற்பேன். ('பேதை' என்றது பருவம் பற்றி அன்று, மடமை பற்றி. 'இனிக் குறை முடிப்பது நாளை என வேண்டா' என்பதாம்.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: பேதை பொருட்டு என்கண் உறங்குதலை இசையாது: ஆதலானே மடலூர்தலை ஒருதலையாக யாமத்தினும் நினைப்பேன். இது மடலேறுவது நாளையன்றே; இராவுறக்கத்திலே மறந்துவிடுகின்றீர் என்ற தோழிக்கு என் கண் உறங்காது ஆதலான் மறவேனென்று தலைமகன் கூறியது.
வீ. முனிசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: என்னுடைய கண்கள் இப்பெண்ணின் காரணமாக ஒருபோதும் துயில் கொள்ளாமல் இருக்கின்றன. ஆகையினால் யாவரும் தூங்குகின்ற பாதி இரவிலும் யான் விழித்துக் கொண்டு மடலூர்தலையே நினைத்துக் கொண்டிருப்பேன்.
Mataloordhal Yaamaththum Ulluven Mandra
Patalollaa Pedhaikken Kan
Couplet
Of climbing 'horse of palm' in midnight hour, I think;My eyes know no repose for that same simple maid
Translation
Madal I ride at midnight for My eyes sleep not seeing this fair
Explanation
Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
Sirappeenum Selvam Perinum Pirarkku
Innaa Seyyaamai Maasatraar Kol
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.