நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல். | குறள் எண் - 1133

naanotu-nallaanmai-pantutaiyen-indrutaiyen-kaamutraar-erum-matal-1133

33

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

"நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்"

கலைஞர் உரை

"நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்."

மு. வரதராசன் உரை

"நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: ('நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது' என்றாட்குச் சொல்லியது.) நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணும் மிக்க ஆண் தகைமையும் யான் பண்டு உடையேன்; காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன் - அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன். (நாண்: இழிவாயின செய்தற்கண் விலக்குவது. ஆண்மை: ஒன்றற்கும் தளராது நிற்றல். 'அவை பண்டு உள்ளன: இன்று உள்ளது இதுவேயாகலின் கடிதின் முடியும்', என்பதாம்.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன்; காமமிக்கார் ஏறும் மடலினை இன்றுடையேனானேன். "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: நாணத்தினையும் மிக்க ஆண் தன்மையினையும் யான் பண்டு கொண்டிருந்தேன். அவை காமத்தால் நீக்கப்பட்டுவிட்டதால், இன்று காமுற்றார் ஏறுகின்ற மடலினை உடையவனானேன். "

வி முனுசாமி உரை

Naanotu Nallaanmai Pantutaiyen Indrutaiyen
Kaamutraar Erum Matal

Couplet

I once retained reserve and seemly manliness;To-day I nought possess but lovers' 'horse of palm'

Translation

Once I was modest and manly My love has now Madal only

Explanation

Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful

33

Write Your Comment