திருக்குறள் 1132: நோனா உடம்பும் உயிரும் மடலேறும் — நாணினை நீக்கி நிறுத்து.

Thirukkural Verse 1132

திருக்குறள் 1132 — நாணுத் துறவுரைத்தல் (The Abandonment of Reserve), காமத்துப்பால்.

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்

நாணினை நீக்கி நிறுத்து.

கலைஞர் உரை

எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்

மு. வரதராசன் உரை

(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.

சாலமன் பாப்பையா உரை

காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: ('நாணுடைய நுமக்கு அது முடியாது', என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது) நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அவ் வருத்தத்தினைப் பொறாத உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன; நாணினை நீக்கி நிறுத்து - அதனை விலக்குவதாய நாணினை அகற்றி. ('வருந்தினார்க்கு' என மேல் வந்தமையின், செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் - ஆகுபெயர். 'நீக்கி நிறுத்து' என்பது ஒரு சொல் நீர்மைத்து. அதுவும் இது பொழுது நீங்கிற்று என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான், அவைதாம் தம்முள் நீங்காமற்பொருட்டு. 'மடலேறும்' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற்குறை நேர்தல் நோக்கி.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்: நாணினை நீக்கி நின்று. இஃது உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: வருத்தத்தினைப் பொறுத்துக்க கொள்ளமுடியாத உடம்பும் உயிரும் நாணத்தினை அகற்றிவிட்டு வருத்தத்திற்குப் பாதுகாப்பான மடல் மாவினை ஊர்ந்து செல்லக் கருதுகின்றன.

Nonaa Utampum Uyirum Matalerum

Naaninai Neekki Niruththu

Couplet

My body and my soul, that can no more endure,Will lay reserve aside, and mount the 'horse of palm'

Translation

Pining body and mind lose shame And take to riding of the palm

Explanation

Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு

ஊற்றுநீர் போல மிகும்.

Maraippenman Yaaniqdho Noyai Iraippavarkku

Ootruneer Pola Mikum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.