வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. | குறள் எண் - 1108
![veezhum-iruvarkku-inidhe-valiyitai-pozhap-pataaa-muyakku-1108](https://kaapiyam.com/images/thirukkural/1108.webp)
திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
"காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்"
"காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்."
"இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே."
"பரிமேலழகர் உரை: (ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே இனியது என வரைவுகடாய தோழிக்குச் சொல்லியது.) (நீ சொல்லுகின்ற தொக்கும்) வளி இடை போழப்படா முயக்கு - ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம்; வீழும் இருவர்க்கு இனிதே - ஒருவரையொருவர் விழைவார் இருவர்க்கும் இனிதே. (முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. 'ஈண்டு இருவர் இல்லை இன்மையான், இஃது ஒவ்வாது' என்பது கருத்து. களவிற்புணர்ச்சியை மகிழ்ந்து வரைவு உடன்படான் கூறியவாறு.). "
"மணக்குடவர் உரை: ஒத்த காதலுடையா ரிருவர்க்கும் இனிதாம்; காற்றால் இடை யறுக்கப்படாத முயக்கம். இது புணர்ச்சி விருப்பினால் கூறினமையால் புணர்ச்சி மகிழ்தலாயிற்று. இது குறிப்பினால் புகழ்ந்தது. "
"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஒரு பொழுதும் நெகிழமையால் காற்று இடையில் புகாமல் தழுவுதல் ஒருவரையொருவர் விரும்புகின்ற இருவர்க்கும் இன்பம் தருவதாகும். "
Veezhum Iruvarkku Inidhe Valiyitai
Pozhap Pataaa Muyakku
Couplet
Sweet is the strict embrace of those whom fond affection binds,Where no dissevering breath of discord entrance finds
Translation
Joy is the fast embrace that doth Not admit e'en air between both
Explanation
To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze
Write Your Comment